ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் ஐசிசி-யிடம் சிக்கியது: சுமதிபாலாவுக்கு சிக்கல்

Report Print Basu in கிரிக்கெட்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபாலா கடுமையான கிரிமினல் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளது.

கிரிக்கெட்டில் ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இலங்கைக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் ஐசிசி முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த தகவல்கள் இலங்கை முன்னாள் கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபாலாவுக்கு சிக்கல் ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

சுமதிபாலாவுடன் பல ஆண்டுகளாக பணியாற்றிய முன்னாள் ஆசோசகர் பிரித்தானியாவைச் சேர்ந்த க்ளின் பால்மர் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் ஐசிசி-யின் ஊழல் தடுப்பு குழு இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளது.

க்ளின் பால்மர் கூறிய சில குற்றச்சாட்டுகள் இலங்கையில் கடுமையான குற்றச் செயல்களுக்கான சான்றுகளாக இருக்கலாம்.

அதை மறுபரிசீலனை செய்து, அத்தகைய ஆதாரங்களை இலங்கையில் உள்ள சட்ட அமலாக்க துறைக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என ஐசிசி இலங்கை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

ஆலோசகரான இருந்து பால்மர், தொலைக்காட்சி உரிமம் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமாக பெற்ற பணத்தை மறைத்து பதுக்குவதற்கான உதவியாளராக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்