நடுவரை ஏமாற்றிய அதிரடி வீரர் பொல்லார்ட்... நோ பாலை புத்திசாலித்தனமாக வீசாமல் தப்பிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவு வீரர் பொல்லார்ட் நடுவரையே ஏமாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கிந்தியதீவு-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்று போட்டிகளிலும் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்று தொடரை வொயிட் வாஷ் செய்தது. இந்த தொடரில் மேற்கிந்திய தீவு அணிக்கு பொல்லார்ட் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையே கடந்த 11-ஆம் திகதி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் 25-வது ஓவரை பொல்லார்ட் வீசிய போது, காலை கீரிசுக்கு வெளியே சென்று வீச, அப்போது உடனடியாக நடுவர் நோ பால் என்று கூற, உடனடியாக பொல்லார்ட் பந்தை வீசாமல் அப்படியே திரும்பினார்.

இதனால் நடுவர் இது ஏற்றுக் கொள்ளப்படாது, மீண்டும் வீசப்படும் என்று கூறினார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்