வங்கதேச டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் படைக்க போகும் மிகப் பெரிய சாதனை... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்துவதன் மூலம், இந்திய மண்ணில் மிகப் பெரிய சாதனைக்கு சொந்தக்கார்ராகவுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, இங்கு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே டி20 தொடர் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடர் நாளை துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழ வீரருமான அஸ்வின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினால், இந்திய மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறுவார்.

(PTI)

இதுவரை இந்திய மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் 350 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளேவும், அதற்கு அடுத்தபடியாக 265 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன்சிங்கும் உள்ளனர்.

தற்போது வரை இந்திய மண்ணில் 249 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால், இந்த ஜாம்பவான்களின் பட்டியலில் இடம் பெற்று, இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை சொந்தமாக்குவார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்