நாளை போட்டியில் இவரை எதிர்கொள்வது தான் சவாலாக இருக்கும்: விராட் கோஹ்லி ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை ரோகித் தலைமையிலான இந்திய அணியிடம் 2-1 என பறிகொடுத்தது.

இதனையடுத்து இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன. இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை இந்தூரில் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட கோஹ்லி கூறியதாவது, முஸ்தபிசுர் சிறந்த பந்துவீச்சாளர். அவர் சிவப்பு பந்தில் பல போட்டிகளை விளையாடிவுள்ளார்.

நாங்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து இடது கை பந்துவீச்சாளர்களில் முஸ்தபிசுர் வித்தியாசமானவர். அவருக்கென கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், நாங்கள் பொதுவாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதில்லை, காரணம் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் யாரும் இல்லை. இது ஒரு சவாலாக இருக்கும், ஆனால் நாங்கள் இந்த சவாலை எதிர்பார்க்கிறோம் என்று கோஹ்லி கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்