குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. 4 போட்டிகளில் விளையாட தடை

Report Print Basu in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டகாரர் நிக்கோலஸ் பூரனுக்கு நான்கு போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

இந்தியாவின் லக்னோவில் உள்ள மைதானத்தில் கடந்த 11ம் திகதி ஆப்கானிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது.

இதில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 என்ற வெற்றி கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணியை வைட் வாஷ் செய்தது.

எனினும், 3வது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டகாரர் நிக்கோலஸ் பூரன், பந்தை தனது ஆடையில் வைத்து தோய்த்தது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பூரனுக்கு நான்கு போட்டியில விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தியதால் 24 வயதான பூரனின் கிரிக்கெட் பதிவில் ஐந்து குறைபாடு புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கான அடுத்த நான்கு டி-20 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் ரசிகர்கள் மற்றும் வீரர்களிடமும், ஆப்கானிஸ்தான் அணி வீரர்களிடமும் நான் ஆழ்ந்த மன்னிப்பு கோருகின்றேன். நான் செய்தது பெரிய தவறு என புரிந்துக்கொண்டேன், ஐசிசி-யின் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் என பூரன் கூறியுள்ளார்.

மேலும், இது தனிப்பட்ட விஷயம் என்பதை நான் அனைவரிடம் உறுதி செய்கிறேன் மற்றும் இனி இதுபோன்று நான் செய்யமாட்டேன். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் கூடுதல் பலம் மற்றும் திறமையுடன் களமிறங்குவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்