சென்னை சூப்பர் கிங்ஸில் இதை கற்றுக்கொண்டேன்! தீபக் சாஹர்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

பனிப்பொழிவின் போது பந்துவீசுவது குறித்து சென்னை சூப்பர் அணியிலிருந்து கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் இந்திய அணி வீரரான தீபக் சாஹர்.

நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றிக்கு வித்திட்டவர் தீபக் சாஹர்.

3.2 ஓவர்கள் வீசி வெறும் 7 ஓட்டங்களே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய இணையளத்துக்கான பேட்டியொன்றில் பேசிய தீபக் சாஹர், இரவு நேரத்தில்பனிப்பொழிவின் போது பந்துவீசுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கற்றுக் கொண்டேன்.

கையை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொண்டு உலர்ந்த மண்ணை அடிக்கடி கையில் தேய்த்துக் கொள்வேன்.

அப்போது தான் பந்து நழுவாமல் இறுக்கமாக இருக்கும், பந்து வீசும் வேகத்திலும் வித்தியாசம் காட்டியதால் நல்ல பலன் கிடைத்தது.

போட்டி முடிவில் தான் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியது எனக்கு தெரியும். ஏனெனில் முந்தைய ஓவரில் கடைசி பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தேன்.

கடினமாக உழைத்து கடவுளின் உதவியால் இந்த நிலையை அடைந்துள்ளேன், முக்கியமான தருணத்தில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அணி நிர்வாகத்துக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 88வது இடத்திலிருந்து தீபக் சாஹர் 42வது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்