தொடக்க வீரராக அறிமுக டெஸ்டிலேயே 500 ஓட்டங்கள்.. தரவரிசையில் அசுரவேகத்தில் முன்னேறிய ரோஹித்!

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, தரவரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரோஹித் ஷர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கினார்.

அத்துடன் முதல் இன்னிங்சில் 176 ஓட்டங்கள் விளாசிய அவர், இரண்டாவது இன்னிங்சிலும் சதம் (127) விளாசி அசத்தினார். அதன் பின்னர் ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்டில் முதல் இரட்டை சதத்தை (212) விளாசி மிரட்டினார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. ரோஹித் ஷர்மா 529 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

இந்நிலையில், டெஸ்ட் தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல் சதம் அடித்த ரஹானே(116) 5வது இடத்திலும், இரட்டை சதம் அடித்த கோஹ்லி(254) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

PTI

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியல்

  • ஸ்டீவ் ஸ்மித்
  • விராட் கோஹ்லி
  • கேன் வில்லியம்சன்
  • புஜாரா
  • ரஹானே
  • ஹென்றி நிக்கோலஸ்
  • ஜோ ரூட்
  • டாம் லாதம்
  • திமுத் கருணரத்னே
  • ரோஹித் ஷர்மா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers