இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலி இன்று பதவியேற்பு!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39வது தலைவராக இன்று பதவியேற்றார்.

மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் முடிந்த நிலையில், பி.சி.சி.ஐ நிர்வாகிகள் தேர்தலில் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வானார்.

அவர் பதவியில் இருக்கப் போகும் 10 மாதங்களில் நிர்வாகத்தை சீரமைப்பது, இரட்டை ஆதாய பதவி விவகாரம், முதல் தர கிரிக்கெட்டை செம்மைப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

கங்குலி தேர்வானதன் மூலம் 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கங்குலி இன்று பதவியேற்றார்.

இதன்மூலம பி.சி.சி.ஐயின் 39வது தலைவராக அவர் பதவியேற்றுள்ளார். அதேபோல், பி.சி.சி.ஐயின் செயலாளராக உள்ள உள்துறை அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும், துணை தலைவராக உத்தரகாண்டை சேர்ந்த மஹிம் வர்மாவும் பொறுப்பேற்றனர்.

BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்