எனது குடும்பத்திற்கு மன்னிக்க முடியாததை செய்துவீட்டீர்கள்: ஸ்ரீசாந்துக்கு தினேஷ் கார்த்திக்கின் பதில்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியில் தனது வாய்ப்பை தடுத்ததாக குற்றம்சாட்டிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக பி.சி.சி.ஐ ஆயுட்கால தடை விதித்தது.

எனினும், அதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய ஸ்ரீசாந்த் அதில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு தற்போது 36 வயதாவதால் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீது அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை ஸ்ரீசாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘நான் சீனிவாசனை திட்டியதாக தினேஷ் கார்த்திக், அவரிடம் கூறியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணி அறிவிக்கப்பட்டபோது அதில் எனக்கு இடமில்லை.

Getty Images

இதற்கு ஒரே காரணம் தினேஷ் கார்த்திக், சீனிவாசனை என்னைப் பற்றி கூறியதுதான். தினேஷ் கார்த்திக் இதை நீங்கள் படித்தீர்கள் என்றால், எனக்கும் எனது குடும்பத்திற்கும் நீங்கள் செய்தது மன்னிக்க முடியாததாகும்.

அடுத்த ஆண்டு நீங்கள் கேரளாவுக்கு விளையாட வரும்போது, என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடவுள் ஆசிர்வதிப்பார்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு தினேஷ் கார்த்திக் பதில் கூறுகையில், ‘ஸ்ரீசாந்த் என்ன கூறியிருக்கிறார் என்பதை நான் அறிந்தேன். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தால் கூட, அது சிறுபிள்ளைத்தன்மாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்