தெ.ஆ. அணிக்கு எதிராக வரலாறு படைத்து.. பல சாதனைகளை முறியடித்த ரோகித்-அகர்வால் ஜோடி

Report Print Basu in கிரிக்கெட்

மாயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் அடித்த உலகின் முதல் ஆரம்ப ஜோடி என்ற வரலாற்றை படைத்துள்ளனர்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்று காலை தொடக்கி நடந்து வருகிறது.

இதில் முதலில் துடுப்பாடிய இந்திய அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஒரு புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துடன், 5 சாதனைகளை முறியடித்துள்ளனர்.

இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஜோடி 317 ஓட்டங்கள் அடித்தது. இதன்மூலம், 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு ஷேவாக் - டிராவிட் ஜோடி 268 ஓட்டங்கள் குவித்திருந்த சாதனையை இந்த ஜோடி தற்போது முறியடித்தது.

Twitter

மேலும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்களை குவித்த ஜோடி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

சொந்த மண்ணில் தங்கள் முதல் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையையும் பெற்றனர்.

இந்திய தொடக்க வீரர்கள் இருவரும் ஒரே இன்னிங்ஸில் சதம் அடிப்பது இது 10வது முறையாகும். கடைசியாக 2018ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் அடித்தனர்.

300 ஓட்டங்களுக்கு கூடுதலாக அடித்த இந்திய ஆரம்ப ஜோடி பட்டியலில் ரோகித்-அகர்வால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

ரோகித் (176), புஜாரா (6) என இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி இரண்டாவது நாள் தொடர்ந்து துடுப்பாடி வருகிறது. சதம் கடந்த அகர்வால், கோஹ்லி ஆகியோர் துடுப்பாடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers