பாகிஸ்தான் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது! அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்த புதிய பயிற்சியாளர் மிஸ்பா

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பிரியாணி உட்பட எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு சாப்பிடக் கூடாது என, புதிய பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், தலைமை தேர்வாளராகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் நடந்த உலகக் கிண்ண போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதி பற்றிய பிரச்னை எழுந்தது.

இந்நிலையில், புதிய பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கடும் உணவு கட்டுப்பாட்டை விதித்துள்ளார். அதன்படி, வீரர்களுக்கான உணவு முறை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

AP

அதில் பிரியாணி மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்பிகியூ உணவு வகைகள், பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிர்வாகிகள் கூறுகையில்,

‘பாகிஸ்தான் வீரர்கள் உணவு முறையை சரியாக கடைபிடிப்பதில்லை. எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும், ஜங் உணவுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் மிஸ்பா உல் ஹக் ஒவ்வொரு வீரர்களிடமும் உடல் தகுதிக்காக, உணவு முறையை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதோடு அதற்காக Lock book ஒன்று பராமரிக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அதைப் பின்பற்றாதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers