அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி இல்லையா? வெளியான தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்
398Shares

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக டோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது டோனி தான். அதிலும் அணித்தலைவராக டோனியின் செயல்பாடு எப்போதும் பிரமாதமாகவே இருந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள், டி20 போட்டிகளிலும் ஓய்வை அறிவிப்பார் என சமீபத்தில் வதந்தி பரவியது.

இதையடுத்து அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக டோனி இருப்பாரா எனவும் சிலர் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து டோனிக்கு நெருக்கமானவரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசன் பேசியுள்ளார்.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.என்.ஆர். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தை திறந்து வைத்து பேசிய அவர், அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக டோனியே இருப்பார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்