ப்பா... யாரா இவன்..! பிரித்தானியர்களை உறைய வைத்த ஸ்மித்: சூப்பர்மேனாக மாறிய காட்சி

Report Print Basu in கிரிக்கெட்

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2019 தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த கேட்ச் இங்கிலாந்து ரசிகர்களை உறை வைத்தது.

நடப்பு ஆஷஸ் தொடரில் ஸ்மித் தனது அற்புதமான துடுப்பாடும் திறமையால் ஓட்டங்களை குவித்து பல சாதனைகளை படைத்து வருகிறார், ஏற்கனவே ஆறு இன்னிங்ஸ்களில் 751 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

30 வயதான ஸ்மித், லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸையும், Headingley டெஸ்டையும் விளையாடவில்லை என்றாலும், நடப்பு ஆஷஸ் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த தரவரிசையில் பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் இறுதி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின், 3வது நாளில், ஸ்மித் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார், ஆனால் இந்த முறை தனது பீல்டிங் திறமையால்.

இரண்டாவது ஸ்லிப்பில் தனது கண்மூடித்தனமான கேட்சின் மூலம் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸை வெறும் ஆறு ஓட்டங்களுக்கு பவுலியன் அனுப்பினார் ஸ்மித்.

அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பந்து வீச, வோக்ஸ் டிரைவ் செய்ய முயன்றார், இருப்பினும், பந்து சற்று விலகி துடுப்பின் விளிம்பில் பட்டு இரண்டாவது ஸ்லிப்யையும் தாண்டிச் சென்றது, ஆனால் சூப்பர்மேன் ஸ்மித் தனது இடதுபுறத்தில் டைவ் செய்து அந்தரத்தில் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

ஸ்மித்தின் அதீத பீல்டிங் திறமையை கண்ட மைதானத்திலிருந்து இங்கிலாந்து வீரர்களும், ரசிகர்களும் வியப்படைந்து அவரை பார்த்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்