அதெல்லாம் முடியாது.. இலங்கை அணி இங்கு வந்தாக வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் பாகிஸ்தான்

Report Print Basu in கிரிக்கெட்

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரை நடுநிலையான இடத்திற்கு மாற்ற மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நம்பகமான தகவல்களை பெற்றதாக பிரதமர் அலுவலகம், கிரிக்கெட் வாரியத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தங்கள் திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாகிஸ்தானின் அறிக்கையின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, ஆனால் தொடரை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது கேள்விக்குறியாக உள்ளது.

அவ்வாறு நடுநிலையாக இடத்திற்கு மாற்றினால் சர்வதேச கிரிக்கெட்டை நிரந்தரமாக பாகிஸ்தானுக்கு கொண்டு வருவது குறித்த திட்டத்திற்கு பாதிப்பை விளைவிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

தொடரை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது, வரவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்கும் வெளிநாட்டு வீரர்களை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய வைப்பது கடினம் என்று வாரியம் நம்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை கராச்சி மற்றும் லாகூரில் இலங்கை மூன்று ஒருநாள் போட்டிகளிலும், டி-20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.

முன்னதாக, 10 இலங்கை வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுப்பயணத்தில் இருந்து விலக முடிவு செய்தனர். இதன் பின்னர், லஹிரு திரிமன்னே இலங்கையின் ஒருநாள் அணியின் தலைவராகவும், தாசுன் ஷானகா டி-20 தொடரின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்