புதிய சாதனை படைத்து அசத்திய இங்கிலாந்து அணி தலைவர் ரூட்! ஜாம்பவான் சச்சினுக்கு அடுத்தது

Report Print Raju Raju in கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

இங்கிலாந்து- அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

ஜோ ரூட் 57 ஓட்டங்களும், ஜோ பேர்ன்ஸ் 47 ஓட்டங்களும் எடுத்தனர். பட்லர் 64 ஓட்டங்கள் மற்றும் லீச் 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டும், கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்து தலைவர் ரூட் 35 ஓட்டங்கள் எடுத்து போது டெஸ்டில் 7 ஆயிரம் ஓட்டங்களை தொட்டார். அவர் 85 டெஸ்டில் 157 இன்னிங்சில் 7022 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இதன்மூலம் குறைந்த வயதில் 7 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த 3-வது சர்வதேச வீரர் என்ற பெருமையை ரூட் பெற்றார்.

அவர் 28 வயது 256 நாட்களில் இந்த ஓட்டங்களை எடுத்தார்.

குக் 27 வயது 346 நாட்களிலும், தெண்டுல்கர் 28 வயது 193 நாட்களிலும் 7 ஆயிரம் ஓட்டங்களை தொட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers