தலையில் பலமாக தாக்கிய பந்து.. ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட ரசலின் நிலை: மருத்துவ அறிக்கை வெளியீடு

Report Print Basu in கிரிக்கெட்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசலுக்கு தலையில் பலத்த அடி விழுந்து தரையில் சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sabina Park மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் Jamaica Tallawahs-St Lucia Zouks அணிகள் மோதின.முதலில் துடுப்பெடுத்தாடிய Jamaica அணி 170 ஓட்டங்கள் அடித்தது. 171 ஓட்டங்கள் என்ற இலக்கை 17வது ஓவரிலேயே எடுத்து அபார வெற்றி பெற்றது St Lucia Zouks அணி.

Jamaica அணியின் துடுப்பாட்டத்தின் போது அதிரடி வீரரான ரசல், 14வது ஓவரில் துடுப்பாடினார். St Lucia வில்ஜோயன் பவுன்ஸரை வீச அதை அடிக்காமல் விட்டார் ரசல். பந்து ரசலின் ஹெல்மட்டின் வலது காதுக்கு அருகில் தாக்கியதில் மைதானத்திலே சுருண்டு விழுந்தார்.

உடனே விரைந்த மருத்துவக் குழுவினர், ரசலை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். இதைக்கண்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரசலுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

தற்போது, சிடி ஸ்கேன் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், ரசலை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் ஹோட்டலுக்கு திரும்பினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers