தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. தமிழக வீரர் அஸ்வினுக்கு இடம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத தமிழக வீரர் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

அணித்தலைவராக கோஹ்லியும், துணைத்தலைவராக ரஹானேவும் செயல்பட உள்ளனர். ரிஷாப் பண்ட், சஹா என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இந்த தொடரில் இடம்பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, பும்ரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அக்டோபர் 2ஆம் திகதி தொடங்க உள்ளது.

அணி விபரம்
 • விராட் கோஹ்லி(அணித்தலைவர்)
 • அஜிங்க்யா ரஹானே(துணைத்தலைவர்)
 • மயங்க் அகர்வால்
 • ரோஹித் ஷர்மா
 • சட்டிஷ்வர் புஜாரா
 • ஹனுமா விஹாரி
 • ரிஷாப் பண்ட்
 • விருத்திமான் சஹா
 • ரவிச்சந்திரன் அஸ்வின்
 • ரவீந்திர ஜடேஜா
 • குல்தீப் யாதவ்
 • முகமது ஷமி
 • ஜஸ்பிரித் பும்ரா
 • இஷாந்த் ஷர்மா
 • சுப்மான் கில்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்