சட்டை அணியாமல் மனைவியுடன் இருக்கும் கோஹ்லி.. வைரலாகும் புகைப்படம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, சட்டை அணியாமல் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்றைய தினம் தனது மனைவி அனுஷ்கா ஷர்மா மீது சட்டை அணியாமல் கோஹ்லி சாய்ந்திருக்கும் புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனுடன் ஒரே ஒரு Heartin ஈமோஜியை மட்டும் பதிவிட்டிருந்தார். அப்புகைப்படத்தில் அனுஷ்கா பிகினி உடையில் இருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவர்களின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

சில மணி நேரங்களிலேயே 50 ஆயிரம் likes-ஐ அள்ளியுள்ளது. அத்துடன் கோஹ்லி-அனுஷ்கா காதலின் அடையாளம் இது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைய இதுதான் காரணம் என சம்பந்தம் இல்லாமல் கூறியதாக கிண்டல் நேரத்தில், கோஹ்லியின் இந்த புகைப்படம் நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

அதாவது, கோஹ்லி உடை அணிவதில்லை. அதனால் தான் ஆடை விற்பனை தொழில் வீழ்ந்துவிட்டது என்பது முதல், பல்வேறு வகையில் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்