புதிய கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி! முதலிடத்தில் உள்ள வீரர் யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

இதன்படி துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (937 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி (903 புள்ளிகள்) 2-வது இடத்திலும், நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் (878 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (914 புள்ளிகள்) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் காஜிசோ ரபடா (851 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா (835 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் தலைவர் ஜாசன் ஹோல்டர் (472 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார்.

வங்காளதேச அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் (397 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (390 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்