பரம ஏழையாக பிறந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் எல்லாம் தெரியுமா? புகைப்படத்துடன்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவை பொறுத்தவரை விளையாட்டில் கிரிக்கெட்டிற்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், அப்படி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் போது, ஒரு சாதரண ஏழை மகனாக இருந்து இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

இர்பான் பதான்-யூசப்பதான்

இந்திய அணி ஆல் ரவுண்டர், ஒரு நல்ல பந்து வீச்சாளர் இல்லாமல் திணறிக் கொண்டிருந்த போது தான் இர்பான் பதானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்ட இர்பான் பதான், இப்போது இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதே போன்று தான் யூசப்பதானுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

பதான் சகோதரர்களின் தந்தை ஒரு சிறிய மசூதியில் ஓதுவாராகவும் மசூதியை சுத்தம் செய்பவராகவும் வேலை செய்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் மசூதிக்குச் சென்று தன் தந்தைக்கு உதவியாக மசூதியை சுத்தம் செய்ய உதவி செய்வார்களாம். இருவருக்குமே பொறுப்பு அதிகம். அந்த பொறுப்புதான் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாற்றியிருக்கிறது

உமேஷ் யாதவ்

இவர் மிகமிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை சுரங்கத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி.

வறுமையின் காரணமாக 12 ஆம் வகுப்புக்கு மேல் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு கட்டத்தில் உமேஷின் குடும்பமே உமேஷின் தந்தை மற்றும் உமேஷின் தினசரி கூலியில் தான் நடந்து கொண்டிருந்தது.

அதன் பின் தன்னுடைய கடின உழைப்பினால், இந்திய அணியில் உமேஷ் யாதவ்வுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ரவீந்திர ஜடேஜா

ஜடேஜாவின் தந்தை பொருட்களை பேக்கிங் செய்து வெளியூருக்கு அனுப்பும் ஒரு ஷிப்பிங் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.

குடும்ப வறுமையின் காரணமாக ஜடேஜாவும் அங்கேயே வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் பயிற்சியால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிக்கான தேசிய அணியில் இடம் பிடித்தார்.

புவனேஷ்வர் குமார்

புவனேஷ் மிகமிக ஏழ்மையான பெரிய குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய சிறுவயதில் விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்த காலகட்டங்களில் அவரிடம் ஒரு ஜோடி ஷூ கூட அவரிடம் இல்லை .

ஆனால், அப்போது அவருடைய சகோதரி தான் சேர்த்து வைத்திருக்கும் சுங்கடிப் பணத்தை வைத்து தன்னுடைய சகோதரனுக்கு உதவியிருக்கிறார். அதுதான் அவரை இன்றைக்கு இந்திய அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது.

இந்திய அணிக்கும் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் கிடைத்திருக்கிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்