மலிங்கா, மேத்யூஸ் உட்பட 10 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை டி-20 அணித்தலைவர்மலிங்கா, மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே ஆகிய 10 வீரர்கள், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இரண்டாம் கட்ட வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி இலங்கை டி-20 அணிக்கு லஹிரோ திரிமன்னே தலைவராகவும்,ஒரு நாள் அணிக்கு தஷுன் சனாகா தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு நிரோஷன் டிக்வெல்லாவின் கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் வாரியம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தேசிய அணியின் பணிகளைப் புறக்கணிக்கும் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுக்கும் வீரர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படாது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்