மூன்று ஆண்டுகள் விளையாடாத பொல்லார்டு அணித்தலைவராக நியமனம்.. புதிய விளக்கமளித்த அணி நிர்வாகம்

Report Print Kabilan in கிரிக்கெட்

தனக்கான இடத்திற்காக ஹோல்டர் போட்டி போட வேண்டும் என்பதற்காக பொல்லார்டு அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் புதிய விளக்கம் அளித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராக பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் 3 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

இதனைத் தொடர்ந்து, அணித்தலைவராக பொல்லார்டை நிர்வாகம் எப்படி தெரிவு செய்தது என்று சக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. பொல்லார்டுக்கு வலுவான ஆதரவை தெரிவித்த, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் இதுதொடர்பாக கூறுகையில்,

‘மூன்று ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடாதவர் பொல்லார்டு. ஹோல்டர் மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கியமான சக்தி. அவர் தான் டெஸ்ட் அணியின் தலைவராகவும் தொடருவார்.

இப்போது ஒருநாள் அணிக்கு பொல்லார்டு அணித்தலைவர் ஆகியிருப்பதால், அணியில் தனக்கான இடத்துக்காக ஹோல்டர் போட்டி போட வேண்டிய நிலை ஏற்படும். அது அவரை மென்மேலும் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்க உதவி புரியும்.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல பொல்லார்டு தான் சரியான நபர். அவரிடம் ஆட்டத்தின் மீதான அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் அதிகம் உள்ளது. அதன் காரணமாக தான் அணித்தலைவராக்கப்பட்டார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்