கோடி கோடியாக குவிக்க காத்திருக்கும் இந்திய பயிற்சியாளர்... அடித்தது ஜாக்பட்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரியின் சம்பளம் பல மடங்கு உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கான தோல்விக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியானது.

ஆனால் மீண்டும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே நியமிக்கப்பட்டார். இதற்கு ஒரு புறம் ஆதரவும், எதிர்ப்பும் வந்தது.

இந்திய அணியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணும் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் மீண்டும் நியமிக்கப்பட்டனர். துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கார் மட்டும் கழட்டிவிடப்பட்டு விக்ரம் ரத்தோர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரிக்கு சம்பள உயர்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கடந்த முறை 8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், மீண்டும் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள சாஸ்திரிக்கு 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எனவே அவரது ஊதியம் 8 கோடியிலிருந்து 10 கோடியாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் தொடரும் பரத் அருண் மற்றும் ஸ்ரீதருக்கு 3.5 கோடி ரூபாய்க்கு வரை ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்