இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் எதிரொலி.. மலிங்கா, திமுத், மேத்யூஸ் அதிரடி முடிவு ... கவலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கையின் மூத்த வீரர்கள் இந்த மாத இறுதியில் கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

இலங்கையின் மூத்த வீரர்கள் மறுப்பு தெரிவித்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொழில்நுட்ப ரீதியாக இது இலங்கை வாரியத்தின் உள் விஷயம், எனவே இது குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், சுற்றுப்பயணம் செப்டம்பர் 25 முதல் நடைபெறுகிறது, அவற்றை கராச்சி மற்றும் லாகூரில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம் என பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி 20 போட்டிகளுக்கு இலங்கை வாரியம் அனுப்பும் எந்த அணியையும் பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளும் என்றார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் கருணாரத்ன, டி-20 அணித்தலைவர் மலிங்கா மற்றும் மூத்த வீரர் மேத்யூஸ் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மாட்டோம் என்று இலங்கை வாரியத்திற்கு தெரிவித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மூன்று வீரர்களின் குடும்பங்களும் பாக்கிஸ்தானில் விளையாடுவதில் சங்கடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது, 2009 மார்ச் மாததட லாகூரில் இலங்கை அணி பயணித்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது..

இலங்கை விளையாட்டு அமைச்சர் திங்களன்று மூன்று வீரர்களை சந்திப்பிற்கு அழைத்துள்ளார், அதில் சுற்றுப்பயணத்திற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்கு உறுதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்