பிரித்தானியா கடவுச் சீட்டு இருக்கா ஆர்ச்சர்? ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அநாகரீகமாக கேள்வி கேட்ட ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரிடம் அவுஸ்திரேலியா ரசிகர்கள் அநாகரீகாம கேள்வி கேட்டது தற்போது தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த நான்காம் திகதி துவங்கியது.

இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய அவுஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடிக்க, அந்தணி 8 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

அதன் பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 23 ஓட்டங்கள் எடுத்தது.

இந்நிலையில் இப்போட்டியின் முதல் நாள் முடிவில் வீரர்கள் தங்களின் அறைக்கு சென்று கொண்டிருந்த போது, அப்போது அங்கிருந்த இரண்டு ரசிகர்கள் ஆர்ச்சர், உங்களுடடைய இங்கிலாந்துக்கான பாஸ்போர்ட்-ஐ காட்டுங்கள் என கூச்சலிட்டனர்.

இதனால் ஆர்ச்சர் கடும் கோபம் அடைந்தார். அதன் பின் அது யார் என்று விசாரித்த போது, அவர்கள் அவுஸ்திரேலியா ரசிகர்கள் என்பது தெரியவந்து. அவர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்