அணித்தலைவரான முதல் போட்டியிலேயே அரைசதம்.. எழுச்சி பெற்ற ஆப்கன்.. அசத்தும் ரஷித் கான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இளம் அணித்தலைவர் ரஷித் கானின் தலைமையில் களமிறங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் 342 ஓட்டங்கள் குவித்துள்ளது.

வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, Chattogram-யில் நேற்று தொடங்கியது. இளம் வீரர் ரஷித் கான் ஆப்கானிஸ்தானின் அணித்தலைவராக பொறுப்பேற்றார்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில், சிறப்பாக விளையாடிய ரஹ்மத் ஷா தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் 102 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

AFP

அவரைத் தொடர்ந்து அஸ்கார் ஆப்கன் அரைசதம் விளாசி, 8 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார். அஃப்சர் ஷஷய் 41 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய அணித்தலைவர் ரஷித் கான் அரைசதம் விளாசினார்.

கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த அவர், 61 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 342 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

வங்கதேச அணி தரப்பில் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்