இந்திய துடுப்பாட்ட வீரர்கள் எனக்கு மரண பயத்தை காட்டினார்கள்..! அவுஸ்திரேலிய பந்துவீச்சு ஜாம்பவான்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தனக்கு மரண பயத்தை காட்டியதாக, அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் தனது அதிவேக பந்துவீச்சால் திணறடித்தவர் பிரெட் லீ. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள கல்லூரியில், காது கேட்பு செயல்திறன் குறை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், ‘தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பும்ராவை பொறுத்தவரை அவர் இந்த சகாப்தத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும், வேகப்பந்து வீச்சு அரசர்களின் அரசராகவும் திகழ்கிறார்.

இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன், டிராவிட் மற்றும் மகேந்திர சிங் டோனி ஆகிய வீரர்களுக்கு பந்துவீசுவது மிகவும் கடுமையான செயல். ஆனால், பொதுவாக இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அனைவருக்கும் எனக்கும் மரண பயத்தை ஏற்படுத்தினர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்