உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்துக்கு சொன்னது போன்றே பரிசு கொடுத்த டிரிபிள் ஹச்: என்ன கொடுத்தார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு WWE வீரர் டிரிபிள் ஹச் அழகான பரிசை அனுப்பியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் போட்டி டிரா ஆனாதால், பவுண்டரி மற்றும் சிக்ஸர்களின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றி குறித்து பல்வேறு சர்ச்சைக்கள் இருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

அந்த வகையில் WWE வீரர் டிரிபிள் ஹச் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், இந்த பெல்ட்(wwe)உங்களுக்கு என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் லோகோ கொண்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை சொன்னது போன்றே, இங்கிலாந்து வீரர்களுக்கு அதே போன்ற பெல்ட்டை அனுப்பியுள்ளார். பெல்ட்டை கையில் பிடித்தபடி இருக்கும் இங்கிலாந்து வீரர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers