பென் ஸ்டோக்ஸ் உலக அணிகள் நடுங்கக்கூடிய வீரர்! அவுஸ்திரேலிய ஜாம்பவான்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ், உலக அணிகள் அஞ்சக்கூடிய வகையிலான வீரர் என்று அவுஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 359 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடியது. துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றிய நிலையில், ஆல்-ரவுண்டர் வீரரான பென் ஸ்டோக்ஸ் மிரட்டலான ஆட்டத்தினால் அணியை வெற்றி பெற செய்தார்.

எட்டு சிக்சர்களுடன் சதம் விளாசிய அவர், உலக கிரிக்கெட் ரசிகர்களை ஒரே போட்டியால் தன் பக்கம் ஈர்த்தார். இதன்மூலம் பல சாதனைகளை படைத்த ஸ்டோக்ஸுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

AP

இந்நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான கிளென் மெக்ராத்தும் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் ஸ்டோக்ஸ் குறித்து கூறுகையில்,

‘பென் ஸ்டோக்ஸ் உலக அணிகள் அஞ்சக்கூடிய வகையிலான வீரர். அவர் மிகவும் சிறந்த துடுப்பாட்ட வீரர். ஆட்டத்தில் கவனம் செலுத்தி மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடி, தேவைப்படும்போது அதிரடியாக துடுப்பாடி அணியை அவரால் மீட்க முடியும்.

மேலும், ஒருநாள் முழுவதும் அவரால் சிறப்பாக துடுப்பாடவும், பந்து வீசவும் முடியும். தலைசிறந்த பீல்டரும் கூட. அவர் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை எளிதாக கூற இயலும். அவர் செய்த சாதனைகளுக்கு இணையான யாரும் நெருங்கி வரவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers