டோனி இப்போது எங்கே, என்ன செய்கிறார்? வைரலாகும் சக வீரர் வெளியிட்ட புகைப்படம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க தொடரில் டோனி விளையாடுவாரா, மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ள நிலையில், அவர் அமெரிக்காவில் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டோனி, தற்போது வரை தனது ஓய்வு முடிவு குறித்து மௌனம் காத்து வருகிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட அவர், இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.

இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா சென்று விளையாட உள்ளது. இந்த தொடரிலாவது டோனி விளையாடுவாரா என அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஒருபுறம் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், டோனி எங்கே இருக்கிறார்? என்ன செய்துகொண்டிருக்கிறார்? என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. சக வீரரான கேதர் ஜாதவுடன் அமெரிக்கா சென்றுள்ள டோனி, அங்குள்ள கிளப் ஒன்றில் கோல்ப் விளையாடியுள்ளார்.

இதனை புகைப்படமாக எடுத்து கேதார் ஜாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட டோனியின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்