ஸ்டோக்ஸ் அதைக் கூட கொண்டாடவில்லை... தனி ஒருவனாக போராடினார்: புகழ்ந்து தள்ளிய ஸ்மித்

Report Print Santhan in கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் சதமடித்தும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வெற்றியை கொண்டாடாமல் அணியின் வெற்றிக்காக போராடியது உண்மையிலே பிரமிப்பாக இருந்தது என்று அவுஸ்திரேலியா அணியின் நடசத்திர வீரரான ஸ்மித் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டி டிராவாகவும் ஆனதால், மூன்றாவது போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே போன்று தோல்வியின் விழும்பில் இருந்த இங்கிலாந்து அணியை, ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனி ஒருவனாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இது குறித்து அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மித் கூறுகையில், ஸ்டோக்ஸின் இன்னிங்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு அருமையான விளம்பரம்.

இந்த போட்டியில் நாங்கள் வென்றிருக்கலாம், ஆனால் ஸ்டோக்ஸ் கணிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியையே தலைகீழாக மாற்றிவிட்டார்.

மிகக்கடுமையான மற்றும் சவாலான போட்டியாளர் ஸ்டோக்ஸ். நெருக்கடியான சூழல்களில் அபாரமாக செயல்பட விரும்புகிறார்.

உலக கோப்பை இறுதி போட்டியில் ஒரு அபாரமான இன்னிங்ஸ் ஆடினார். தற்போது மீண்டும் அதேமாதிரியான ஒரு சிறந்த இன்னிங்ஸ். கிரிக்கெட் மீதான அவரது ஈடுபாடும், கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடும் அவரது மனப்பான்மையும் அபாரமானவை.

இந்த போட்டியில் சதமடித்த போதும் கூட அவர் கொண்டாடவில்லை, சதத்தை அவர் பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

அவரது இலக்கு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதிலே இருந்தது. ஒரு அணிக்கு என்ன தேவையோ அதை அப்படியே வழங்கக்கூடிய வீரராக ஸ்டோக்ஸ் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்