தென் ஆப்பிரிக்க தொடரிலும் டோனிக்கு இடம் இல்லையா?

Report Print Abisha in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கவிற்கு எதிரான தொடரில் டோனி இடம்பெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை தொடரிலும் டோனி மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்ததும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து தானாக முன்வந்து விலகி ராணுவப் பயிற்சி மேற்கொண்டார்.

சுமார் 20 நாள்கள் காஷ்மீரில் ராணுவ முகாமில் தங்கி அவர்களுடன் பணியாற்றினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்தார்.

பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், ஒரு சதாரண அளவில் விளையாடினார் ரிஷப். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரைப் போல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதில் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 4-ஆம் திகதி தேர்வு செய்யப்பட உள்ளது. இதில்தான் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டுவருகிறது.

இதுதொடர்பாக PTI செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ``2020 உலகக் கோப்பை டி20 தொடருக்கு முன்பாக இந்தியா 22 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. இதனால் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் விரும்புகின்றனர். அந்தவகையில் உலகக் கோப்பை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு விளையாட எதுவாக அணி தரப்பில் மூன்று விக்கெட் கீப்பர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். 2020 உலகக்கோப்பை டி20 தொடருக்கான செயல்திட்டம் இப்போதே வகுக்கப்பட்டு வருகின்றது. அதில் ரிஷப் பந்த் இடம்பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனக் கூறியுள்ளார்.

இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் டோனிக்கு இடம் கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்