இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஒரே போட்டியில் புதிய மைல்கல்லை எட்டிய நியூசிலாந்து வீரர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சௌதி, டிரெண்ட் போல்ட் இருவரும் புதிய மைல்கல்லை எட்டினர்.

நியூசிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, கொழும்பின் சாரா ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் டெஸ்டில் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினர்.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்சில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, 250 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியுள்ளார்.

டிம் சௌதி 67 டெஸ்டில் 251 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட் 63 டெஸ்டில் 253 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இருவருமே ஒரே வயதுடையவர்கள்(30) என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்