ஆசிய அளவில் சாதனை படைத்த இந்திய அணி வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ட்பிரீட் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆன்டிகுவாவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 308 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 222 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன்மூலம் 419 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள், இந்திய அணியின் பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 100 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், பும்ரா 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் புதிய சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார்.

அதாவது, பும்ரா பங்கேற்ற வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள் அனைத்திலும் 5 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறார். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்