ஸ்மித்தையா வெளியேத்துன... ஆர்ச்சரை பழிக்கு பழி தீர்த்த அவுஸ்திரேலியா: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பவுன்சர் வீசி ஆர்ச்சரை அவுஸ்திரேலியா வீரர்கள் வீழ்த்தி பழிக்க்கு பழி தீர்த்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்டு ஆஷஸ் தொடரில் நடைபெற்று வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 22-ஆம் திகதி துவங்கியது.

அதன் படி அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, அவுஸ்திரேலியா அணியை கதிகலங்க வைத்தார்.

ஆர்ச்சரின் பவுன்சரில் அவுஸ்திரேலியா அணி திணறியது.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது, இதில் இங்கிலாந்து அணி வெறும் 67 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அவுஸ்திரேலியாவிடம் சரணடைந்தது.

குறிப்பாக அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட் 5 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பவுன்சர் மூலம் ஸ்மித்தை வெளியேற்றிய ஆர்ச்சரை, இந்த போட்டியில் தன்னுடைய துல்லியமான பவுன்சர் மூலம் பெய்ன் அவுட்டாக்கி வெளியேற்றியுள்ளார்.

இந்த வீடியோவை அவுஸ்திரேலியா ரசிகர்கள், ஆர்ச்சரை போன்றே பவுன்சர் வீசி அவரே துல்லியமாக அவுட்டாக்கிவிட்டனர். இதுக்கு பேர் தான் பழிக்கு பழி என்று வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் தன்னுடைய துல்லியமான பவுன்சர் மூலம், ஸ்மித்தை நிலைகுலைய வைத்தார். இதனால் ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை, அதுமட்டுமின்றி அவர் இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்