டோனி இல்லையா? கோஹ்லியை வழிநடத்துவது இவர் தானாம்... அவரே அளித்த பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி தன்னை வழிநடத்துவது யார் என்பது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியாக உள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆடி வரும் இந்திய அணி இரண்டாம் நாளில் 297 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவு அணி ஆடி வருகிறது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவில் இருக்கும் கோஹ்லி அங்கிருக்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், கிரிக்கெட் என் வாழ்வில் கிடைத்ததை விட மிகப்பெரிய வரம். ஒரு சரியான துணையை(அனுஷ்கா சர்மா) தேர்வு செய்துள்ளேன்.

ஏனென்றால் அவர் தனது தொழிலை தானே செய்கிறார். அத்துடன் எனக்கான இடத்தையும் முழுமையாக புரிந்து வைத்துள்ளார். அவர் என்னை சரியான பாதையில் வழிநடத்திச் செல்கிறார். அவரிடம் இருந்து நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

வாழ்க்கையில் அனுஷ்கா சர்மா சரி, ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டோனி தான் கோஹ்லிக்கு பல இடங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளார். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையின் போதும் டோனி, கோஹ்லியை அறிவுரை வழங்கியுள்ளார்.

இப்படி இருக்கையில், ஒரு வார்த்தைக்கு கூட டோனியைப் பற்றி கோஹ்லி சொல்லவில்லையே என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்