கோஹ்லியால் கூட சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க முடியாது: அதிரடி வீரர் சேவாக்

Report Print Kabilan in கிரிக்கெட்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியால் கூட முறியடிக்க முடியாது என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல வீரர்களின் சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் விரைவாக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை கோஹ்லியால் முறியடிக்க முடியாது என்று முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

Srikanta Sharma R/ DH Photo

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இப்போது சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி தான். அவர் சதம் அடிக்கும் விதம், ஓட்டங்கள் குவிக்கும் விதம் என அனைத்துமே சிறப்பானது தான்.

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினின் பல்வேறு சாதனைகளை கோஹ்லி நிச்சயம் முறியடிப்பார். ஆனால், சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் பங்குப் பெற்றுள்ளார். இந்த ஒரு சாதனையை விராட் கோஹ்லியால் கூட முறியடிக்க முடியாது. எந்த ஒரு வீரரும் அதனை முறியடிப்பார் என எனக்கு தோன்றவில்லை’ என தெரிவித்துள்ளார்.

AP

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,291 ஓட்டங்கள் குவித்தார். இதில் 51 சதங்கள் அடங்கும். விராட் கோஹ்லி 78 டெஸ்ட் போட்டிகளில் 6622 ஓட்டங்களுடன், 25 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்