கொழும்பு டெஸ்ட்: சொதப்பிய மேத்யூஸ்.. பொறுப்பாக ஆடிய கருணரத்னே

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இலங்கை அணி 144 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அணியின் score 93 ஆக இருந்தபோது ஏஞ்சலோ மேத்யூஸ் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பின்னர் வந்த குசால் பெரேரா ஓட்டங்கள் எடுக்காமல் போல்ட் ஓவரில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா நிதானமான ஆட்டத்தினை கடைபிடித்தார்.

AFP

மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய அணித்தலைவர் கருணரத்னே அரைசதம் அடித்தார். இது அவருக்கு 23வது டெஸ்ட் அரைசதம் ஆகும்.

இந்நிலையில், சௌதி வீசிய பந்தில் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து கருணரத்னே ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் எடுத்தார்.

அதன் பின்னர் வந்த டிக்வெல்லவும் வாட்லிங்கிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்தது.

அணியின் score 144 ஆக உயர்ந்தபோது மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. தனஞ்செய 32 ஓட்டங்களுடனும், தில்ரூவன் பெரேரா 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட், சௌதி தலா 2 விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம், சோமர்செட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்