இலங்கைக்கு எதிரான டெஸ்ட்.. புதிய மைல்கல்லை எட்டிய நியூசிலாந்து வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, கொழும்பில் உள்ள பி சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை, இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

இலங்கையின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், குசால் பெரேரா ஆகியோரது விக்கெட்டுகளை நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் வீழ்த்தினார்.

இதன்மூலம், டெஸ்டில் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டினார். இதற்கு முன்பு ஹட்லி (431), வெட்டோரி (361) ஆகியோர் மட்டுமே நியூசிலாந்து அணியில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

அதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களிலும் போல்ட் 3வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 63 டெஸ்ட்களில் 251 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் டிம் சௌதி (245) உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்