ஒரே போட்டி.. தன்னை விமர்சித்தவர்களை வாயடைக்க வைத்த ரஹானே!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் துணைத்தலைவர் ரஹானே அரைசதம் விளாசி தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆன்டிகுவாவில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மட்டும் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மயங்க் அகர்வால், புஜாரா, கோஹ்லி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், துணைத்தலைவர் நங்கூரமாய் நின்று ஆடினார். எதிரணிக்கு கடும் சவாலாக இருந்த ரஹானே அரைசதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய ஹனுமா விஹாரி 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 10 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் எடுத்தார். அவரது அரைசதத்தால் இந்திய அணி 200 ஓட்டங்களை எட்டியது. ஐ.பி.எல் தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடிய ரஹானேவுக்கு, உலகக் கிண்ண தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதனால் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று ஆடினார். எனினும் அவர் சிறப்பான பார்மில் இல்லை. இதனால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அவரை தெரிவு செய்வதில் சந்தேகம் இருந்தது. இந்நிலையில் தான் ரோஹித்துக்கு பதிலாக களம் கண்ட ரஹானே, தன்னை விமர்சித்தவர்களுக்கு தனது துடுப்பாட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்