தமிழக வீரர் அஸ்வினை ஓரங்கட்டியது இதற்காக தான்.. வெளிப்படையாக கூறிய துணைத் தலைவர் ரஹானே

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து இந்திய டெஸ்ட் அணியின் துணைத் தலைவர் ரஹானே விளக்கமளித்துள்ளார்.

ஆன்டிகுவாவில் நடந்த முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் துணைத்தலைவர் ரஹானே அளித்த பேட்டியில், அணியின் ஒட்டுமொத்த சமநிலை காரணமாகவே அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று பரிந்துரைத்துள்ளார்.

அஸ்வின் போன்ற ஒரு வீரரை இழப்பது கடினம், ஆனால் அணி நிர்வாகம் எப்போதும் சிறந்த ஜோடியை குறித்தே கருத்தில் கொண்டிருக்கும்.

ஜடேஜா ஒரு நல்ல தெரிவாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள், ஏனெனில் அணிக்கு ஆறாவது விக்கெட்டுக்கு துடுப்பாட்டகாரர் தேவை, அவர் பந்தும் வீசுவார். ஹனுமா விஹாரியும் பந்து வீச முடியும். எனவே அணித்தலைவருக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான கருத்து இதுதான்.

அஸ்வின் மற்றும் ரோகித் போன்ற வீரர்களை உட்கார வைப்பது கடினம், ஆனால் அவை அனைத்தும் அணிக்காகவே என்று ரஹானே கூறினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி ஒரு நாள் மற்றும் டி 20 தொடரை கைப்பற்றிய நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஆன்டிகுவாவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்