தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது... இந்திய முன்னாள் வீரர் ஆதங்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

கோஹ்லி தலைமமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. அதன் படி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 68.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் தமிழக வீரரான அஸ்வின், அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதனால் ரசிகர்கள் பலரும் கோஹ்லி மற்றும் ரவிசாஸ்திரியை திட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், பல சாதனைகளை படைத்திருப்பவர் அஸ்வின், அதிலும் குறிப்பாக மேற்கிந்திய தீவு அணிக்கெதிராக அவருடைய சாதனைகள் நிறைய உள்ளன.

ஆனால் அவர் விளையாடும் லெவன்ஸில் இல்லாதது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்