அதிரடி மன்னன் கெய்ல் ஓய்வு குறித்து தெளிவான விளக்கம்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் நான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தொடக்க அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் வழக்கமாக 45 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்.

ஆனால் இந்தப் போட்டியில் தனது 301-வது ஒருநாள் போட்டியை குறிக்கும் வகையில் 301 என்ற எண் அடங்கிய ஜெர்ஸியை அணிந்து விளையாடினார்.

இதனைக் காணும் போது கெய்ல் தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் என அனைவரும் நினைத்திருந்தனர்.

மேலும் கிறிஸ் கெய்ல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய போது இந்திய வீரர்கள் பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர்.

கெய்ல் தான் ஓய்வறைக்கு செல்லும் போது தனது கிரிக்கெட் பேட்டின் நூனிப்பகுதியில் தலைக்கவசத்தை அணிவித்து அனைவரிடமும் காட்டியபடி சென்றார். இப்போட்டி முடிந்த பின்னர் கெய்லிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பியபோது, தான் ஓய்வு குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை என்று பதிலளித்தார்.

இது குறித்து மேற்கிந்திய தீவு அணியின் டுவிட்டர் பக்கத்தில் கெய்ல், நான் எனது ஓய்வு பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் நீங்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடர்ந்து விளையாடுவீர்களா என கேள்வி எழுப்பியபோது, ஆமாம், நான் என்னுடைய ஓய்வு முடிவை அறிவிக்கும் வரை மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடருவேன். என தனது ஓய்வு முடிவு குறித்து கெய்ல் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்