இலங்கை அணியின் ஜாம்பவனான ஜெயவர்த்தனே தற்போது இருக்கும் காலத்தில் எந்த பந்து வீச்சாளரின் பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை கூறியுள்ளார்.
கடந்த 1997-ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணிக்காக ஆடியவர் ஜெயவர்த்தனே, சிறந்த துடுப்பாட்ட வீரரான ஜெயவர்தனே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் இருக்கிறார்.
அனைத்து காலத்திலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் ஜெயவர்த்தனேவிடம், இந்தக்காலத்தில் இருக்கும் பந்து வீச்சாளர்களில் யார் உங்களுக்கு நெருக்கடி கொடுப்பார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். ஜெயவர்த்தனே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.