தனஞ்செய சுழலில் உருகுலைந்த நியூசிலாந்து.. போராடும் ராஸ் டெய்லர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

காலே டெஸ்டில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்செயவின் பந்துவீச்சில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி ஜீத் ராவல் மற்றும் டாம் லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

இந்த கூட்டணியை 27வது ஓவரில் அகில தனஞ்செய பிரித்தார். டாம் லாதம் 30 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

சிறிய இடைவெளியில் ஜீத் ராவல் 33 ஓட்டங்களில், தனஞ்செயவின் பந்துவீச்சில் வெளியேறினார். நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள் என்று தடுமாறிய நிலையில், ராஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இருவரும் கைகோர்த்தனர்.

AFP

இவர்களது கூட்டணியின் மூலம் கணிசமான அளவு score உயர்ந்தது. இந்நிலையில் அணியின் score 171 ஆக உயர்ந்தபோது, நிக்கோலஸ் (42) எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வாட்லிங்கையும் தனஞ்செய ஆட்டமிழக்க செய்தார். இதற்கிடையில் அரைசதம் கடந்த ராஸ் டெய்லர் நங்கூரம் போல் நின்று விளையாடினார். அணியின் score 5 விக்கெட் இழப்புக்கு 203 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 68 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது.

ராஸ் டெய்லர் 86 ஓட்டங்களுடனும், மிட்செல் சாண்ட்னர் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் அகில தனஞ்செய 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers