ஓய்வுக்கு பின் முக்கிய அணிக்கு பயிற்சியாளரான மெக்கல்லம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கல்லம், சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

விக்கெட் கீப்பரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான மெக்கல்லம், ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

அத்துடன், ஐ.பி.எல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில், அதே அணிக்கு உதவி பயிற்சியாளராக மெக்கல்லம் தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார். 37 வயதாகும் மெக்கல்லம், 101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ஓட்டங்களும், 260 ஒருநாள் போட்டிகளில் 6,083 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

மேலும், 71 டி20 போட்டிகளில் 2,140 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும்.

Reuters / Philip Brown Livepic

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்