தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே.. புதிதாக களமிறங்கும் அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக, உலகக்கோப்பை டி20 தகுதிச்சுற்று போட்டிகளில் நைஜீரியா அணியை களமிறக்க ஐ.சி.சி முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நிர்வாக சீர்கேடு பிரச்சனைகள் காரணமாக, ஐ.சி.சி கிரிக்கெட்டில் இருந்து ஜிம்பாப்வே அணி தடை செய்யப்பட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்றுகளில், ஜிம்பாப்வே அணியால் விளையாட முடியாமல் போனது.

எனவே, ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக நைஜீரியா அணியை தகுதிச்சுற்று போட்டிகளில் களமிறக்க ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது. அதேபோல் ஜிம்பாப்வேக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், மகளிர் உலகக்கோப்பை டி20 தகுதிச்சுற்றுகளில் நமீபியா மகளிர் அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் நைஜீரியா, யு.ஏ.இ, ஹாங்காங், அயர்லாந்து, கென்யா, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பபுவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் விளையாடும்.

மேலும், உலகக்கோப்பை தொடரில் தகுதி பெறும் 6 அணிகள் இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றுடன் முதல் சுற்றில் இணையும். அவுஸ்திரேலியாவில் இந்த டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...