இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த வீரர்களின் விவரம் வெளியானது

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட 22 வீரர்களைக்கு கொண்ட இலங்கை அணிக்கு, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஒப்புதல் அளித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இலங்கை உடன் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டி தொடரிகளில் விளையாட உள்ளது.

2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி காலி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும். இலங்கை டெஸ்ட் அணியில் 22 பேர் இடம்பிடித்துள்ளனர், இந்த 22 வீரர்களில் இருந்து இறுதி 15 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தெரிவாகியுள்ள இலங்கை வீரர்கள் பட்டியல்: திமுத் கருணாரத்ன - அணித்தலைவர், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமல், லஹிரு திரிமன்னே, குசால் மெண்டிஸ், குசல் ஜானித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ பெரேரா, ஓஷாடா பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக, ஷெஹன் ஜெயசூரியா, சாமிகா கருணாரத்ன, தில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, லசித் எம்புல்டேனியா, லக்ஷன் சண்டகன், சுரங்க லக்மல், லஹிரு குமாரா, விஸ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜிதா, அசிதா பெர்னாண்டோ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்