டிராவிட்டுக்கு ஏற்பட்ட சோதனை.! இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாத்தனும்: கொந்தளித்த கங்குலி, சிங்

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் நன்னெறி அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 6ம் திகதி இந்திய ஜம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

மத்திய பிரதேச இந்திய கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா, டிராவிட் மீது அளித்த புகாரை அடுத்து நோட்டீஸ் அனுப்பியதாக பிசிசிஐ வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

புகாரின் படி, தற்போதைய என்.சி.ஏ தலைவராக இருக்கும் டிராவிட், ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருவது முரண்பாடாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராவிட் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக இந்திய அணியின் கங்குலி கடுமையாக சாடியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கங்குலி, `இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபேஷன்... இந்த ஆதாய முரண்... செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி. இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள்தான் உதவ வேண்டும் எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

கங்குலியின் கருத்தை ஹர்பஜன் சிங்கும் வரவேற்றுள்ளார். கங்குலியின் ட்வீட்டை குறிப்பிட்டு, ``இது உண்மையா....? நாம் எங்கே செல்கிறோம் என்றே தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு டிராவிட்டை விட சிறந்த நபர் கிடைக்க மட்டார். இதுபோன்ற ஜம்பவான்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்பது அவர்களை அவமதிக்கும் செயல்.

கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு அவர்களின் சேவை தேவை.. ஆம், இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்