கோஹ்லி-பந்த் அதிரடி.. சாஹர் புயல்..! மேற்கிந்திய தீவுகள் வாஷ்அவுட்: இந்தியா அபாரம்

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வாஷ்அவுட் செய்து 3-0 என இந்திய தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது

கயானாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பொல்லார்டு அதிகபட்சமாக 58 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 3 ஓவர்கள் வீசி 1 மெய்டின், 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி 59 ஓட்டங்களும், ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

ஆட்ட நாயகனாக இந்திய பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவு செய்யப்பட்டார், தொடர் நாயகனாக இந்திய வீரர் குருணல் பாண்ட்யா தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்